Sunday, May 7, 2017

பிளாஸ்டிக் கவரில் டீ, பால், சாம்பார் வழங்க தடை: தி.மலையில் அதிரடி

பதிவு செய்த நாள் 07 மே2017 01:23

திருவண்ணாமலை 'டீ, பால், சாம்பார், ரசம் உள்ளிட்ட உணவு பொருட்களை, பிளாஸ்டிக் கவரில் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, திருவண்ணாமலை கலெக்டர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் பிரசாந்த்.மு.வடநேரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஓட்டல்கள், டீ கடைகள் மற்றும் பேக்கரிகளில், சமைத்த உணவை வழங்குவதற்கு அச்சிட்ட காகிதங்கள், செய்தித்தாள்கள் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். இதில் காரீயம், காட்மியம் போன்ற ரசாயன பொருட்கள் உள்ளன. அவை உணவு பொருட்களில் கலந்து புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, மூளை நரம்பு பாதிப்புகள் மற்றும் ஜீரண குறைபாடுகளை உருவாக்குகிறது.

அச்சிட்ட காகிதங்களில் பொட்டலம் மடிப்பதை, உணவு பாதுகாப்பு மற்றும் தர
நிர்ணய ஆணையம் தடை செய்துள்ளது. எனவே, வாழை இலை, பாக்குமட்டை, தேக்கு இலை போன்ற இயற்கையான மக்கும் தன்மையுள்ள பொருட்களில் பொட்டலமிட வேண்டும். மேலும் டீ, பால், சாம்பார், ரசம், போன்றவற்றை பிளாஸ்டிக் கவர்களில் வழங்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கவர்களில், சூடான உணவுகளை வழங்குவதால் புற்றுநோய் ஆபத்து ஏற்படும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்
படுத்துவது கண்டறியப்பட்டால், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...