Monday, May 1, 2017

#HBDBelovedThalaAJITH ஹேப்பி பர்த்டே அஜித்குமார்!
ராகுல் சிவகுரு




இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடும் 'தல' அஜித் குமாருக்கு, தமிழ் சினிமாவில் இது வெள்ளிவிழா ஆண்டு! தனது ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்துகொண்டிருக்கும் அஜித் குமாருக்கு அனிருத், பிரேம்ஜி, விக்ரம் பிரபு, தனுஷ், ராகுல்தேவ், சிவகார்த்திகேயன், லட்சுமி மேனன், 'சிறுத்தை' சிவா, டி. இமான் போன்ற பல திரைத்துறைப் பிரபலங்கள், ட்விட்டரில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்! கடந்த 1993-ல், மாருதி ராவ் என்பவரது இயக்கத்தில் வெளியான 'பிரேம புஸ்தகம்' எனும் தெலுங்கு படத்தில், சித்தார்த் எனும் கதாபாத்திரத்தில் திரை அறிமுகம் கண்டார் அஜித்குமார்; பின்னர் அதே ஆண்டில், செல்வாவின் இயக்கத்தில் வெளியான 'அமராவதி' தான், அஜித்தின் முதல் நேரடி தமிழ்ப்படம்!



வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சிவா-அஜித் காம்போவில், ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில், கிழக்கு ஐரோப்பாவில் விரைவாக உருவாகி வரும் படம்தான் விவேகம். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் அஜித்தின் 57-வது படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அஜித்குமாரின் பர்த்டே ஸ்பெஷல் மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வெளியான விவேகம் படத்தின் இரண்டாவது போஸ்டர்தான், முன்னே நீங்கள் பார்த்தது! அதில் தனது தோள்பட்டையில், மரம் ஒன்றை தூக்கியபடி மரண மாஸ் லுக்கில் இருக்கிறார் அஜித்குமார். இந்நிலையில் ஆகஸ்ட் 11-ம் தேதி, விவேகம் வெள்ளித்திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

No comments:

Post a Comment

SC verdict on super speciality seats ‘historic’, says Minister

SC verdict on super speciality seats ‘historic’, says Minister He attributes the verdict to the timely filing of writ petition by T.N. gover...