உலகிலேயே நம்பர் 1 குடிகார நாடு எது? ஒரு அலசல் ரிப்போர்ட்!
By DIN | Published on : 17th September 2017 05:36 PM
ஆண்டுக்கு 2.5 மில்லியன் இறப்புகள் மது அருந்தும் பழக்கத்தால் ஏற்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கை கூறுகிறது. 'உலகம் முழுவதிலும் 4 சதவிகித மரணங்கள் குடிப்பழக்கத்தால் ஏற்படுகிறது' என்றும் அந்த ஆய்வறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
எச்.ஐ.வி / எய்ட்ஸ், வன்முறை அல்லது காசநோய் ஆகியவற்றால் ஏற்படும் இறப்புகளைவிட ஆல்கஹால் காரணமாக மிக அதிகமான இறப்புகள் ஏற்படுகின்றன. அதிகப்படியான மது அருந்தும் நாடுகளாக 193 நாடுகளைப் பட்டியலிட்டு அவற்றின் மது நுகர்வு விகிதங்களையும் வெளியிட்டது WHO. பொதுவாக வளர்ந்த நாடுகளில் மதுப் பழக்கம் மிக அதிக அளவிலும், முஸ்லீம் மக்கள் அதிகமுள்ள நாடுகளில் இப்பழக்கம் குறைந்த விகிதத்திலும் இருந்து வருவதும் கண்டறியப்பட்டது.
மேலும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மதுபானங்களில் முதலிடம் பெற்றது பீர்தான். அடுத்து வைன். அதன் பின்னரே மற்ற குடிபானங்களின் வரிசை. சிலர் குடிப்பதற்காக சொந்தமாக தொழிற்சாலை கூட வைத்திருக்கிறார்களாம்.
உலகிலேயே அதிகமாக மது அருந்தும் பட்டியலில் முதல் 25 இடங்களைப் பிடித்த நாடுகள் :
பின்லாந்து, ஜெர்மனி, லக்ஸம்பர்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து, ஸ்லோவாக்கியா, டென்மார்க், யுனைடட் கிங்டம், பிரான்சு, ஐயர்லாந்து, போர்ச்சுகல், சவுத் கொரியா, லூதியானா, க்ரோஷியா, பெலாரஸ், ஸ்லொவேனியா, ரொமானியா, அண்டோரா, எஸ்தோனியா, உக்ரேன், ரஷ்யா, ஹங்கேரி, செக் ரிபப்ளிக், மால்தோவா, லத்வியா ஆகிய நாடுகள் முதல் 25 இடங்களைப் பிடிக்கின்றன.
யேமன் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் மிகக் குறைந்த அளவில் மது அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது.
இதில் குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தியா இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பதுதான்.
No comments:
Post a Comment