Monday, September 18, 2017

இறந்த தாய்க்கு சேர வேண்டிய குடும்ப ஓய்வூதியத்தை மகனின் வீடு தேடிச் சென்று 48 மணி நேரத்துக்குள் வழங்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Published : 17 Sep 2017 08:54 IST

சென்னை




இறந்த தாய்க்கு சேர வேண்டிய குடும்ப ஓய்வூதிய நிலுவைத் தொகையை மகனுக்கு 48 மணி நேரத்துக்குள் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள் ளது.

சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் காட்வின். இவரது தந்தை ஆல்பர்ட் தேவராஜ் சார்பு நீதிபதியாக பணியாற்றி கடந்த 1970-ல் ஓய்வு பெற்றவர். கடந்த 1985-ல் ஆல்பர்ட் தேவராஜ் மரணமடைந்தார். இதையடுத்து, அவரது ஓய்வூதியத்தை காட்வினின் தாய் அனிராஜம் பெற்று வந்தார். இந்நிலையில், அவர் கடந்த 2014-ல் காலமானார். இதையடுத்து, தனது தாய்க்கு வரவேண்டிய குடும்ப ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்கக்கோரி காட்வின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சிகிச்சைக்கு பயன்படும்

இந்த வழக்கு நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர், அப்துல் குத் தூஸ் ஆகியோர் அடங்கிய அமர் வில் விசாரணைக்கு வந்தது. அப் போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் ஆஜராகி, மனுதாரர் உடல்நலக்குறைவால் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அவரது இறந்த தாய்க்கு சேர வேண்டிய குடும்ப ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்கினால் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படும் என்றார்.

இதையடுத்து ஓய்வூதிய நிலுவைத் தொகையை வங்கி அதிகாரிகள் 48 மணி நேரத்தில் மனுதாரரின் வீட்டுக்கே நேரில் சென்று வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...