Tuesday, September 19, 2017

கிரிக்கெட் போட்டி : ரூ.49 லட்சம் வருவாய்
பதிவு செய்த நாள்18செப்
2017
23:07


சென்னையில் நடந்த, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியால், தமிழக அரசுக்கு, 49 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே, நேற்று முன்தினம், '50 ஓவர்' கிரிக்கெட் போட்டி நடந்தது. அங்கு, இதற்கு முன், 45 ஆயிரம் பேர் போட்டியை காண வசதி இருந்தது. 

இவற்றின், டிக்கெட் விற்பனை வழியே, அரசுக்கு, கணிசமான, 'வாட்' வரி கிடைத்தது.

சில காரணங்களால், மூன்று மாடங்களுக்கு சென்னை மாநகராட்சி, 'சீல்' வைத்துள்ளது. அதனால், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, 12 ஆயிரம் இருக்கைகள் காலியாக உள்ளன.

இந்நிலையில், ஜி.எஸ்.டி., அமலுக்கு பின், முதன்முறையாக, சர்வதேச ஒரு நாள் போட்டி, அங்கு நடந்துள்ளது. 2015ல் நடந்த போட்டியின் போது, 750 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச டிக்கெட் விலை, தற்போது, 1,200 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதிகபட்சமாக, 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. அதற்கு, ஜி.எஸ்.டி.,யாக, 98 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. அதில், தலா, 50 சதவீதத்தை, மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொண்டன.
அதன்படி, தமிழகத்திற்கு, 49 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது என, வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...