Saturday, September 16, 2017

சவுதி அரேபியாவில் புரட்சியை முன்னெடுத்த தனி ஒருத்தி!

vikatan

ஜெ.சரவணன்

பெண்களுக்கான சுதந்திரம் என்பது சவுதி அரேபியாவில் இன்னமும் நடக்காத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த நிலையை மாற்றும் முயற்சியில் முதல் அடியை தனிஒருத்தியாக எடுத்து வைத்திருக்கிறார் மனால் அல் ஷரிஃப்.



மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரியும் மனால் சமீபத்தில் அமெரிக்காவுக்கு மாற்றுதல் செய்யப்பட்டார். சவுதி அரேபியாவில் பெண்கள் அனைவரும் ஆண்களில் நிழலில்தான் வாழ வேண்டும் என்ற நிலை இன்னமும் நீடித்து வருகிறது. அங்கே காரைக் கூட பெண்கள் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. அப்படி மீறி ஓட்டினால் சிறை தண்டனை விதிக்கப்படும். அப்படிப்பட்ட நிலையிலிருந்து அமெரிக்காவின் வாழ்க்கை முறைக்கு மாறிய மனால், தானாக வாகனத்தை ஓட்டும்போது சுதந்திர உணர்வை அனுபவத்திருக்கிறார். அது அவருக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஆனந்தத்தையும் தந்திருக்கிறது.

மீண்டும் அவர் சவுதி அரேபியாவுக்கு வந்தபோது இந்த மாற்றத்தை தனது நாட்டில் ஏற்படுத்த திட்டமிட்டு துணிந்து இறங்கியுள்ளார். ஏற்கெனவே சவுதி அரேபிய இளைஞர்கள் சமூக வலைதளங்களில் மாற்றத்தை வேண்டி பிரசாரம் செய்துவரும் நிலையில், மனால் அல் ஷரிஃபின் கார் ஓட்டும் புரட்சியானது தொடங்கியிருக்கிறது. அதற்காக அவர் சிறையில் ஒன்பது நாள்கள் அடைக்கப்பட்டார்.

ஆனால், அவரது இந்த முன்னெடுப்பு சவுதி மக்களிடையே வரவேற்பை உண்டாக்கியது. எல்லோரும் அதற்காக களம் இறங்கி போராட ஆரம்பித்தனர். சவுதியில் மாபெரும் மாற்றங்கள் நிகழ இந்தத் தனி ஒருத்தியின் முன்னெடுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பாராட்டப்படுகிறது.

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...