முதல் காட்சியிலேயே என் வாயில் ஒருவர் சிறுநீர் கழித்தார்: விஜய் சேதுபதி ஓப்பன் டாக்
Published : 18 Dec 2018 13:07 IST
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சீதக்காதி’. பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இந்தப் படம், வருகிற 20-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
இந்நிலையில், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த விஜய் சேதுபதியிடம், ‘நீங்கள் சினிமாவில் நுழையக் காரணம், ரசிகர்களின் கைதட்டல் மட்டும்தானா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
“கண்டிப்பாக... ‘வர்ணம்’ என்றொரு படம். முதல்முறையாக எனக்கொரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவனாக நான் நடித்தேன். அதில் முதல் காட்சியே என் வாயில் ஒருவர் சிறுநீர் கழிப்பது போன்றது.
நான் அதில் நடித்து முடித்ததும், ஒட்டுமொத்தப் படக்குழுவும் கைதட்டினர். அது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ஏனென்றால், என்னால் நடிக்க முடியும் என்று நான் உணர்ந்தது அன்றுதான்.
நான் நடிப்பதால்தான் அந்தக் குழுவில் இயக்குநரில் ஆரம்பித்து லைட்மேன் வரை வேலைசெய்ய முடிகிறது என்பதை எனக்கு நானே பலமுறை சொல்லிக்கொண்டேன்” எனப் பதில் அளித்தார் விஜய் சேதுபதி.
‘சீதக்காதி’யைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள ‘பேட்ட’ படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

No comments:
Post a Comment