Saturday, February 7, 2015

குடும்ப அட்டையில் பொருட்களை மாற்றும் வசதி தற்போது கிடையாது: விழுப்புரம் மாவட்ட வழங்கல் துறை தகவல்

குடும்ப அட்டையில் பொருட்களை மாற்றும் வசதி தற்போது இல்லை என விழுப்புரம் மாவட்ட வழங்கல் அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது.

குடும்ப அட்டை விண்ணப்பிக்கும்போது சர்க்கரை, மண்ணெண்ணெய் மட்டும் போதும் என விண்ணப்பித்துவிட்டு தற்போது அரிசியும் வாங்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும். யாரிடம் விண்ணப்பிக்கவேண்டும் என்பது பற்றி தகவல் வெளியிடுமாறு ‘தி இந்து' உங்கள் குரல் பகுதிக்கு புகார் வந்தது.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட வழங்கல் அலுவலக அதிகாரி ஒருவரிடம் விசாரித்த போது, குடும்ப அட்டை விண்ணப்பிக்கும்போது அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் என எதுவேண்டுமோ அதை விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். பின்னர் எரிவாயு இணைப்பு பெறும்போது தானாகவே மண்ணெண்ணெய் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். பின்னர் மற்றொரு விருப்பமாக அரிசி, சர்க்கரை என ஏதாவது ஒன்றை நியாயவிலை கடைகளில் மாதந்தோறும் பெறலாம்.

குடும்ப சூழ்நிலை காரணமாக அரிசியிலிருந்து சர்க்கரைக்கோ, சர்க்கரையிலிருந்து அரிசிக்கோ விருப்பத்தை மாற்றும் வசதி ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் தற்போது அந்த வசதியை அரசு ரத்து செய்துவிட்டது. இது அரசின் கொள்கை முடிவாகும். வருங்காலங்களில் மீண்டும் அந்த வசதியை அரசு கொண்டுவர வாய்ப்புள்ளது என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024