Monday, August 1, 2016

சவுதியில் 7 மாதங்களாக வேலையிழந்து சம்பளம், உணவின்றி பரிதவிக்கும் 10,000 இந்தியரை தாயகம் அழைத்துவர ஏற்பாடு: சுஷ்மா ஸ்வராஜ் உறுதி

Return to frontpage

சவுதி அரேபியாவில் உணவு இன்றி பரிதவிக்கும் 10,000 இந்தியர்கள் விமானம் மூலம் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார்.

இதனிடையே மத்திய அரசு உத்தரவின்பேரில் சவுதியின் ஜெட்டா நகரில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் 5 நிவாரண முகாம் கள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட இந்திய தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரை சேர்ந்த சவுதி ஒகர் கட்டுமான நிறுவனத்தில் 50 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 4 ஆயிரம் பேர் இந்தியர்கள். அண்மைகாலமாக மத்திய கிழக்கு நாடுகளில் கட்டுமானத் தொழில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனால் கடந்த 7 மாதங்களாக சவுதி ஒகர் நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. அன்றாட சமையலுக்கு தேவையான உணவுப் பொருட்களையும் அளிக்கவில்லை. இதனால் 4 ஆயிரம் இந்திய தொழிலாளர்களும் வேலையிழந்து உணவின்றி பரிதவித்து வந்தனர்.

மேலும் சில சவுதி நிறுவனங் களில் பணியாற்றும் இந்தியர்களுக் கும் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களும் பசி, பட்டினியில் பரிதவித்தனர்.

அமைச்சர் சுஷ்மா அறிவிப்பு

இந்தப் பிரச்சினை குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

சவுதி அரேபியாவில் ஒட்டு மொத்தமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உணவின்றி பரிதவித்து வருகின்றனர். அவர் களுக்காக இந்தியத் தூதரகம் சார்பில் 5 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த முகாம்களில் 2,450 இந்திய தொழிலாளர்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களாக அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன.

சவுதியில் சுமார் 30 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உணவின்றி தவிக்கும் உங்கள் சகோதர, சகோதரிகளுக்கு தாராளமாக உதவி செய்யுங்கள். இந்தியர்களின் மனஉறுதிக்கு முன்பு எதுவும் பெரிது இல்லை.

பாதிக்கப்பட்ட இந்தியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அவர்கள் அனைவருக்கும் ஜெட்டா வில் இந்திய தூதரகம் தேவையான அனைத்து உதவிகளையும் வழங் கும். குவைத் நாட்டிலும் இந்திய தொழிலாளர்கள் வேலையிழந்து தவிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. எனினும் அங்கு நிலைமை கவலைப்படும் அளவுக்கு இல்லை.

சவுதி அரேபியாவில் தவிக்கும் 10 ஆயிரம் இந்தியர்களையும் விமானம் மூலம் தாய்நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தொழிலாளர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப் படும் புகைப்படங்களை சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் வெளியிட் டுள்ளார்.

சவுதி செல்லும் வி.கே.சிங்

இதனிடையே இந்திய தொழிலாளர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்ய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் விரைவில் சவுதி செல்கிறார். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை இந்தியா அழைத்து வர தேவை யான ஏற்பாடுகளை அவர் செய்வார் என்று தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜெட்டாவில் அடுத்த சில நாட்களில் மேலும் 3 முகாம்கள் திறக்கப்பட உள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரேபியா, குவைத் அரசுகளுடன் இந்திய வெளி யுறவு அமைச்சகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சவுதி அரசு விசாரணை

இதுதொடர்பாக சவுதி அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சில கட்டுமான நிறுவனங்கள் ஊழியர் களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட நிறு வனங்கள் சட்டத்தை மீறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு அபராதம், தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்தன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024