Wednesday, September 6, 2017

ஸ்டிரைக்கில் பங்கேற்க மாட்டோம்: அலுவலர் ஒன்றியம் அறிவிப்பு

பதிவு செய்த நாள்06செப்
2017
00:42

சிவகங்கை: ''ஜாக்டோ- ஜியோ சார்பில் நடக்கும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்,'' என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார்.

அவர் சிவகங்கையில் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து; ஊதிய முரண்பாடுகளை களைந்து, புதிய ஊதியக்குழு மாற்றத்தை செயல்படுத்துவது; தொகுப்பூதியம் ரத்து உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மே 14 ல் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்தோம். இதையடுத்து ஜூலை 28ல் முதல்வர் எங்களை அழைத்து பேசினார்.செப்.30க்குள் ஊதியக்குழு மாற்ற பரிந்துரை செயல்படுத்தப்படும்; வல்லுனர் குழு பரிந்துரை அடிப்படையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் முடிவெடுக்கப்படும் என, உறுதியளித்தார். செப்., 30 வரை எந்த போராட்டத்திலும் பங்கேற்பதில்லை என, முடிவு செய்துள்ளோம்.இதனால் ஜாக்டோ ஜியோ சார்பில் செப்., 7 முதல் நடக்கும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம். எங்களிடம் உறுதியளித்தபடி கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் அக்.2ல் கன்னியாகுமரியில் இருந்து எழுச்சிப் பயணம் மேற்கொள்வோம். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஊர்வலம் நடக்கும். தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், செயலாளர் ரமேஷ்கண்ணன் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024