Wednesday, September 27, 2017

ஏற்காட்டில் 2வது நாளாக விடிய, விடிய கனமழை: 150 அடி உயரத்தில் இருந்து 80 டன் ராட்சத பாறை உருண்டது

2017-09-27@ 00:04:28




சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு அடிவாரத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் 150 அடி உயரத்தில் இருந்து 80 டன் எடை கொண்ட ராட்சத பாறை உருண்டு சாலையோரத்தில் விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் அப்போது மக்கள் நடமாட்டமோ, வாகன போக்குவரத்தோ இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், அந்த பாறையை அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர். 2 நாளில் பாறை முழுவதும் இயந்திரம் மூலம் உடைக்கப்பட்டு அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் இருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் செல்லும் ரோட்டில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே ₹2.80 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதன் அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்க

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024