Wednesday, September 27, 2017

காதல் ஜோடிக்கு கல்லூரியில் தடை

2017-09-27@ 00:03:57




கோவை: கோவையை சேர்ந்த சாந்தினி மெகபூப் ஜான். கோவை டாடாபாத் பகுதியை சேர்ந்தவர் சுதேஷ். இவர்கள் இருவரும் குரும்பபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி இருவரும் கலப்பு பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனைதொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் தற்காலிக நீக்கம் செய்துள்ளது. கல்லூரிக்குள் நுழைய இவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

மேலும், சிறப்பு அனுமதியின் பெயரில் கட்டணமின்றி படித்து வந்ததால், தற்போது முழு கல்வி கட்டணத்தையும் செலுத்தி தேர்வு மட்டும் எழுத அனுமதிப்பதாக கல்லூரி நிர்வாகத்தினர் கூறுவதாக கூறி, காதல் ஜோடிகள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து புகார் மனு அளித்தனர். பிளஸ்-2 வகுப்பில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றதால் இலவச கட்டணமில்லா கல்வி அளித்து வந்த கல்லூரி நிர்வாகம் கல்வியில் ஆர்வமுள்ள தங்களை கல்லூரியில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024