Wednesday, September 27, 2017

பாஸ்போட்டில் உள்ள புகைப்படத்தை விட நேரில் இளமையாக தோன்றியதால் பெண் பாடகி கைது
2017-09-26@ 17:31:08




நியூயார்க்: நடாலியா ஜென்கிவ் என்ற பெண் பாடகி துருக்கி சென்றுவிட்டு திரும்பியபோது நியூயார்க் விமான நிலையத்தில் அவரது பாஸ்போட்டை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதிலிருந்த புகைப்படத்தை விட நேரில் நடாலியா இளமையாக தோன்றியதால் அவர் வேறுஒருவரின் பாஸ்போட்டை வைத்து மோசடி செய்துவிட்டதாக கூறி அவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். பின்னர் உண்மை அறிந்து நடாலியாவை அதிகாரிகள் விடுவித்தனர்.

மேலும் இது தனது அழகுக்கு கிடைத்த வித்யாசமான அங்கீகாரம் என நடாலியா கூறியுள்ளார். இந்த சம்பவத்துக்கு பிறகு நடாலியாவுடன் செல்பி எடுக்கவும் ஆட்டோகிராப் பெறவும் ஆர்வம் காட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாடகி நடாலியா ஜென்கிவ் உக்ரேன் நாட்டை சேர்ந்தவர், இவரின் வயது 41 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024