Thursday, September 21, 2017

உயர் சிறப்பு மருத்துவ காலியிடங்களை நிரப்ப கலந்தாய்வு நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
2017-09-21@ 00:55:25




புதுடெல்லி : தமிழகத்தில் காலியாக உள்ள உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான இடங்களை நிரப்ப, 3வது கட்டமாக கலந்தாய்வு நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு (டிஎம்எச்) 1,215 இடங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 192 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இந்த இடங்களில் தற்போது மற்ற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் சேரலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. மருத்துவ சேவை தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) தான் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தும்’என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில், கடந்த ஆகஸ்டில் இந்த படிப்புகளுக்கான கலந்தாய்வை தமிழக அரசு இரு கட்டங்களாக நடத்தியது.

இந்நிலையில், உயர் சிறப்பு மருத்துவ படிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று புதிய மனு தாக்கல் செய்தது. அதில், ‘தமிழகத்தில் உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. அதில், மொத்தமுள்ள 192 இடங்களில் 99 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப 3ம் கட்டமாக கலந்தாய்வு நடத்த அவகாசம் அளிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, நாளை அவசர வழக்காக விசாரிக்க உள்ளது. இதே வழக்கில் நேற்று முன்தினம் 75 மருத்துவர்கள் கலந்தாய்வு நடத்த அவகாசம் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

KGMU to put to test viral hepatitis drugs

KGMU to put to test viral hepatitis drugs  TIMES OF INDIA .....LUCKNOW 27.12.2024  Lucknow : The microbiology department of King George’s Me...