Wednesday, September 27, 2017

தாம்பரம் அரசு பள்ளிக்கு தூய்மைக்கான விருது
பதிவு செய்த நாள்26செப்
2017
23:16

தாம்பரம்;மாவட்ட அளவிலான துாய்மை பள்ளிக்கான விருதை, தாம்பரம் அரசுப் பள்ளி பெற்றது.தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு, துாய்மைக்கான விருது அறிவிக்கப்பட்டு, அதற்கான தேர்வு நடந்தது.மொத்தம், பங்கேற்ற, 25 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், வெற்றி பெற்ற பள்ளிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பழைய தாம்பரம் பகுதியில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளி, விருது வென்றுள்ளது.இந்த பள்ளியில் படிக்கும், 141 மாணவர்களுக்கு, சுத்தமான குடிநீர், மேற்கத்திய முறை கழிவறைகள், சோப் மற்றும் துண்டுடன் கூடிய கை கழுவுமிடம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.மொத்தம் உள்ள, 71 மாணவிகளுக்கு, கழிவறைகளில், நாப்கின் எரியூட்டி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் தரமாக செய்யப்பட்டுஉள்ளதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் மாயகிருஷ்ணன் தெரிவித்தார்.பள்ளியை பாராட்டி, 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024