Wednesday, September 27, 2017

ரயில்வே புது அட்டவணை மீண்டும் தள்ளிவைப்பு
பதிவு செய்த நாள்26செப்
2017
23:34

சென்னை;தெற்கு ரயில்வே, ரயில் கால அட்டவணை வெளியிடுவது, நவம்பர், 1க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே, ரயில் கால அட்டவணை ஆண்டுதோறும், அக்., 1ல் வெளியிடப்படும். 'இந்தாண்டு, அக்., 15ல் வெளியிடப்படும். அதுவரை, தற்போதைய ரயில் கால அட்டவணைப்படி, ரயில்கள் இயக்கப்படும்' என, தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.தற்போது, ரயில் கால புதிய அட்டவணை வெளியீடு, நவ., 1க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான காரணம் குறித்தோ, புதிய அட்டவணை வெளியீடு குறித்தோ, ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரம், அக்., 31 வரை, தற்போதைய கால அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே கூறி உள்ளது.





No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024