Thursday, September 21, 2017

6 வங்கி காசோலைகளை பயன்படுத்த எஸ்.பி.ஐ., தடை
பதிவு செய்த நாள்21செப்
2017
00:35


புதுடில்லி : எஸ்.பி.ஐ., எனப்­படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா வங்கி, தன்­னு­டன் இணைந்த, ஆறு துணை வங்­கி­களின் காசோலை புத்­த­கங்­களை, வாடிக்­கை­யா­ளர்­கள் பயன்­ப­டுத்த வேண்­டாம் என, கேட்­டுக் கொண்­டுள்­ளது.

எஸ்.பி.ஐ., உடன், ஸ்டேட் பேங்க் ஆப் பிகா­னிர் அண்டு ஜெய்ப்­பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் திரு­வாங்­கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்­டி­யாலா, ஸ்டேட் பேங்க் ஆப் ஐத­ரா­பாத், பார­திய மகிளா வங்கி ஆகிய ஆறு துணை வங்­கி­கள், ஏப்., 1ல் இணைந்­தன. இதை­ய­டுத்து, இந்த ஆறு வங்­கி­களின் வாடிக்­கை­யா­ளர்­கள், அதே வங்­கிக் கணக்கு எண்­க­ளு­டன், எஸ்.பி.ஐ., வாடிக்­கை­யா­ளர்­க­ளாக மாறி­னர்.

இந்­நி­லை­யில், எஸ்.பி.ஐ., வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், ‘எஸ்.பி.ஐ., உடன் இணைந்த, ஆறு துணை வங்­கி­களின் காசோலை புத்­த­கங்­களை, வாடிக்­கை­யா­ளர்­கள், செப்., 30 முதல் பயன்­ப­டுத்த வேண்­டாம்’ என, கூறப்­பட்­டுள்­ளது. ஏப்­ர­லில், வங்கி கணக்­கில் மாத சரா­சரி இருப்பு தொகையை பரா­ம­ரிக்­காத வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, எஸ்.பி.ஐ., அப­ரா­தம் விதித்­தது.

இது பற்றி, எஸ்.பி.ஐ., தேசிய வங்கி குழு­வின் நிர்­வாக இயக்­கு­னர் ரஜ்­னிஷ் குமார் கூறு­கை­யில், ‘‘வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் இருந்து, அப­ரா­தம் குறித்து நிறைய புகார்­கள் வரு­கின்றன. இதை, பரி­சீ­லித்து வரு­கி­றோம்,’’ என்­றார்

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024