நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு எம்.பி.பி.எஸ். சேர்க்கை: சிஎம்சி நிர்வாகம் முடிவு
By DIN | Published on : 07th September 2017 02:27 AM |
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை முறை காரணமாக தொடர்ந்து பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் தங்களது சேர்க்கை நடைமுறை பாதிக்கப்படுவதாகக் கூறி இந்த முடிவை சிஎம்சி நிர்வாகம் எடுத்துள்ளது. வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி) மொத்தம் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, முதலாம் ஆண்டு வகுப்புகளும் தொடங்கி விட்டன.

சிஎம்சி நிர்வாகம் இதுவரை கடைப்பிடித்து வந்த சேர்க்கை முறையை, அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிஎம்சி நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதாவது, மத்திய அரசின் நீட் தேர்வை ஏற்பதாகவும், சிஎம்சி-இல் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்கள் இந்தியாவில் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட சில தகுதிகளை முன்வைத்து நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களைத் தான் சேர்க்கைக்கு அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என சிஎம்சி நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.
இந்த வழக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) விசாரணைக்கு வர உள்ளது. அதுவரை எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க சிஎம்சி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment