Thursday, October 1, 2015

பணியின்போது உயிரிழக்கும் அரசு அலுவலர் குடும்பத்துக்கு முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்வு



பணியின்போது இறக்கும் அரசுப் பணியாளர் குடும்பத்தின் உடனடி தேவைக்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நேற்று நிதித்துறை, பொதுத்துறை, ஓய் வூதியங்கள் உள்ளிட்ட துறை களின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்புகள்:

பணியின்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளர் குடும்பத்துக்கு உடனடி தேவைக்காக வழங்கப் படும் முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த் தப்படும். முன்னாள் படைவீரர் களுக்கு தொழில் சார்ந்த செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க ரூ.1 கோடி வழங்கப்படும்.

முப்படைகளில் பரம்வீர்சக்ரா, அசோக சக்ரா, மகாவீர் சக்ரா உள்ளிட்ட விருதுகள் மற்றும் பதக்கங்கள் பெறும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசு மற்றும் ஆண்டு உதவித்தொகைகள் உயர்த்தி வழங்கப்படும். இரண்டாம் உலகப்போரின்போது பணிபுரிந்த தமிழக முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 ஆக உயர்த்தப்படும்.

டேராடூன் ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024