Wednesday, October 28, 2015

ரூ.749-க்கு நாடு முழுவதும் விமானப் பயணம்: ஸ்பைஸ்ஜெட் தீபாவளி சலுகை ...............பிடிஐ



ரூ.749-க்கு இந்தியா முழுவதும் விமான பயணம் செய்ய கட்டண சலுகையை விமான போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது. சுமார் 3 லட்சத்திற்கும் மேலான இருக்கைகளை இந்த சலுகைக்காக ஒதுக்கியுள்ளது.

அக்டோபர் 27 முதல் 29 வரை மூன்று நாட்களில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இந்தச் சலுகை விலையில் 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை பயணம் செய்து கொள்ளலாம். மேலும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட்கள் விற்கப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கூறியுள்ளது.

உள்நாட்டில் பயணம் செய்வதற்கு அடிப்படை கட்டணமாக 749 ரூபாயும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு அடிப்படை கட்டணமாக 3,999 ரூபாயும் கட்டண சலுகையாக அறிவித்துள்ளது.

இந்தக் சலுகை கட்டணங்கள் என்பது வரிகள் மற்றும் இதர கட்டணங்கள் உள்ளடக்கியது கிடையாது.

மேலும், மொபைல் செயலி மூலம் பதிவு செய்பவர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணக் கட்டணத்தில் 3 சதவீதம் வரை கூடுதலாக சலுகை வழங்கவுள்ளதாகவும் ஸ்பைஸ்ஜெட் கூறியுள்ளது.

இது குறித்து ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இந்த கவர்ச்சிகரமான சலுகை மூலம் உலக முழுவதும் இருந்து வாடிக்கையாளர்களை கவர முடியும். மேலும் தற்போதுள்ள சலுகையை பயன்படுத்தி வாடிக்கையாளார்கள் அடுத்த வருடம் பயணம் செய்வதற்கு முன்கூட்டியே தங்கள் பயணங்களை எளிதாக திட்டமிட்டு கொள்ளமுடியும்'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024