Saturday, October 3, 2015

புலி'க்கு வரிச்சலுகை மறுப்பு ஏன்?- அதிகாரிகள் கூறும் காரணங்கள்

Return to frontpage

விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'புலி' படத்துக்கு வரிச்சலுகை மறுப்பு ஏன் என்பதற்கான காரணங்களை அதிகாரிகள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, சுதீப், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் அக்டோபர் 1ம் தேதி வெளியாகி இருக்கும் படம் 'புலி'. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளியாகி இருக்கும் இப்படத்தை பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கு வரிச்சலுகை அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். அதற்கான காரணம் என்ன என்பது வெளியாகாமல் இருந்தது.

'புலி' படத்துக்கான வரிச்சலுகைக்கான காட்சியை சி.பழனி, ம.சி.தியாகராஜன், முனைவர் கா.மு.சேகர், டி.ஐ.மகாராஜன், ஏ.ஐ.ராகவன் மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் பார்த்திருக்கிறார்கள். ஏன் வரிச்சலுகை அளிக்கவில்லை என்பதற்காக அவர்கள் கூறியிருக்கும் காரணங்கள்.

* திரைப்படத்தில் மூட நம்பிக்கைகளை உண்மையாக காட்டப்படும் காட்சிகள் தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் உள்ளன.

* படத்தின் பாடல் காட்சியில் மகளிரின் ஆடைகள் ஆபாச காட்சிகளாக சில இடங்களில் அமைந்துள்ளன.

* படத்தில் குழந்தையின் கழுத்து அறுபடுவது, சண்டைக் காட்சியில் வன்முறை, கொலைக்காட்சிகள் நேரிடையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

* மனித உயிர்களுக்கு மதிப்பளிக்கவில்லை. குழந்தைகளையும், பெண்களையும் வெட்டிக் கொல்லுவது ஏற்புடையதாக இல்லை. அதிகமான வன்முறை காட்சிகள் உள்ளது.

* திரைப்படம் முழுக்க வன்முறை அதிகரித்துள்ளது. ஆரம்பித்திலே இரட்டை அர்த்த வசனங்கள், 12 வயது குழந்தை கழுத்து வெட்டப்படுவதாக காட்டப்படுகிறது. மேலும், படம் முழுவதும் மூட நம்பிக்கைக்கு உயிர் ஊட்ட முளைத்திருப்பதால் வரி விலக்கிற்கு தகுதியானது அல்ல.

இவ்வாறு வரிச்சலுகை அதிகாரிகள் அனைவருமே ஆபாசம் மற்றும் வன்முறைக் காட்சிகளை மேற்கோள்காட்டி படத்துக்கு வரிவிலக்கு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024