Sunday, May 14, 2017

நீட்' தேர்வில் மாறுபட்ட வினாத்தாள் ஏன்? விளக்கம் கேட்கிறது மத்திய அரசு

பதிவு செய்த நாள் 14 மே
2017 04:46



பெங்களூரு:''ஹிந்தி, ஆங்கில வினாத்தாள்களை விட, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில், 'நீட்' வினாத்தாள் கடினமாக இருந்ததாக புகார் வந்துள்ளதால், அது குறித்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது,'' என, மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

பத்து மொழிகள்

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான, பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, நாடு முழுவதும் சமீபத்தில் நடந்தது. இதில், ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், பெங்காலி, மராத்தி உட்பட, 10 மொழிகளில் தேர்வு நடந்தது. இதில், ஹிந்தி, ஆங்கில வினாத்தாளிலிருந்து, மற்ற மொழி வினாத்தாள் மாறுபட்டு இருப்பதாக புகார் எழுந்தது. குறிப்பாக, பெங்காலி வினாத்தாள் கடினமாக இருந்ததாக, மாணவ, மாணவியர் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று நடந்த விழாவில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது:

ஏற்கனவே நடந்த தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, சமீபத்தில் நடந்த தேர்வுக்கு, உடை விஷயத்தில், கடினமான விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. இதில், ஒரு சில மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது; கேரளாவில் ஒரு மாணவிக்கு நடந்த கெடுபிடி குறித்து, சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, நான்கு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

நடவடிக்கை

ஹிந்தி, ஆங்கில வினாத்தாள்களை விட, மற்ற மாநில மொழி வினாத்தாள் மாறுபட்டு இருந்ததாகவும் புகார் வந்துள்ளது. இந்த பிரச்னைக்கு என்ன காரணம் என, விளக்கம் அளிக்கும்படி, சி.பி.எஸ்.இ.,யிடம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்கப்பட்டதும், அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees The Court refused to interfe...