Sunday, June 18, 2017

50 கி.மீ.,க்கு ஒரு பாஸ்போர்ட் ஆபீஸ் நீண்ட தூரம் அலைய வேண்டிய தேவையில்லை!!

பாஸ்போர்ட்டுகள் வாங்குவதை எளிமைப்படுத்தும் வகையில்,149 புதிய, போஸ்ட் ஆபீஸ் பாஸ்போர்ட் சேவை மையங் களை, வெளியுறவுத்துறை அமைச்சகம் துவக்கியுள்ளது.
இதுகுறித்து, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் கூறியதாவது:

நாட்டில் பெரும்பாலானோர், பாஸ்போர்ட்பெறுவதற்கு, நீண்ட துாரம் செல்லும் நிலைஉள்ளது. இதற்கு தீர்வாக, 50 கி.மீ., சுற்றளவுக்குள், பாஸ் போர்ட் சேவை மையங்களை துவக்க திட்ட மிடப் பட்டு உள்ளது.இதன்படி,முதற்கட்டமாக,86 போஸ்ட் ஆபீஸ் பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவக்கப் பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, மேலும், 149 பாஸ்போர்ட் சேவை மையங்கள் தற்போது துவக்கப்பட்டுள்ளன. இவை, போஸ்ட் ஆபீஸ்களில் செயல்படும். பொது மக்கள் எவரும், பாஸ்போர்ட் வாங்க, 50 கி.மீ., துாரத் துக்கு அதிகமாக செல்ல வேண்டிய நிலை இருக்கக் கூடாது என இலக்கு நிர்ணயித்து நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மூன்றாம் கட்டமாக, மேலும் அதிகளவில் பாஸ் போர்ட் சேவை மையங்கள் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்.வெளிநாடுகளில் உள்ள,18 - 30 வயதுடைய இந்தியர்கள், நம் நாட்டைப் பற்றிதெரிந்து கொள்ளும் வகையில், 'இந்தியாவை தெரிந்து கொள்ளுங்கள்' என்ற பெயரில், திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 2004 முதல்,இதுவரை, 1,293 பேர், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து, தங்கள் மூதாதையர் ஊர்களுக்கு வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Fake details, blank documents: ‘Donkey’ gets nursing certificate

Fake details, blank documents: ‘Donkey’ gets nursing certificate 30.09.2026 Jamal.Ayub@timesofindia.com  Bhopal: An online nursing registrat...