Sunday, June 18, 2017

தோளில் சுமந்தார்...தோழனாய் மாறினார்!

பதிவு செய்த நாள்18ஜூன்2017 02:16




பெற்ற தாயின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்றாலும், அதே நேரத்தில் அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்காக தன்னலமற்ற தியாகத்துடன் ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை. குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுப்பது தாய் என்றால், அதற்கு எல்லாம் சேர்த்து வைத்துதான் தம்மால் இயலும் வரை தோளிலும் முதுகிலும் சுமக்கிறார் தந்தை.

தந்தையின் உழைப்புக்கு பிள்ளைகள் மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மூன்றாவது ஞாயிறு (ஜூன் 18) உலக தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியாவில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இன்று அனைவரும் தந்தைக்கு நேரிலோ அல்லது அலைபேசியிலோ வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.

உற்ற தோழன்

தன் பிள்ளையின் அழுகை, சிரிப்பு, கண்ணீர், சந்தோஷம் என அனைத்து தருணங்களிலும் பங்கெடுத்துக்கொள்பவர் தந்தை. சில தந்தைகள் தன் குழந்தைக்கு நண்பனை போல இருப்பர். 'அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்' என்ற பாடல்வரிகள் தாய்,
தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத்தருவதே இதன் நோக்கம். தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி, அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தர வேண்டும்.

எப்படி வந்தது

அமெரிக்காவில் 1909ல் வாஷிங்டனைச் சேர்ந்த 'சொனாரா லுாயிஸ் ஸ்மார்ட் டாட்' என்ற இளம் பெண் தான், முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக்கூடாது என வலியுறுத்தினார். இவரது தாய், தனது 6வது பிரசவத்தின் போது மரணமடைந்தார்.

தாயின் மறைவுக்கு பிறகு தந்தை வில்லியம் 6 குழந்தைகள் கொண்ட குடும்பத்தை கடுமையான சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்கு துாண்டியது. இதன்படி 1910ல் அமெரிக்காவில் முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.

1966ல் அங்கீகரிக்கப்பட்டது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. சில நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கடைபிடிக்கப்பட்டாலும், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Declare assets online by Oct, TN govt tells staff

Declare assets online by Oct, TN govt tells staff  Julie.Mariappan @timesofindia.com 11.09.2026 Chennai: Tamil Nadu govt has made it mandato...