ஜூலை 20, 27-ல் காரைக்கால்-கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்
By DIN |
Published on : 11th July 2017 07:44 PM |
சென்னை: காரைக்கால்-கொச்சுவேலி இடையே ஜூலை 20, 27-ல் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள
அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: - காரைக்கால்-கொச்சுவேலி இடையே
ஜூலை 20, 27-ல் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும். அதேபோல்
கொச்சுவேலி-காரைக்கால் இடையே ஜூலை 19, 26-ல் சிறப்பு கட்டண சிறப்பு ரயில்
இயக்கப்படும்.
இது நாகை, திருவாரூர், திருச்சி, மதுரை,
நெல்லை, நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம் வழியாக இயக்கப்படும் என்று
தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment