Wednesday, July 5, 2017


ரஜினி மகள் செளந்தர்யாவுக்கு சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து!
By DIN | Published on : 04th July 2017 06:25 PM



சென்னை: ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கும் அவரது கணவர் அஸ்வினுக்கும் சென்னை குடும்பநல நீதிமன்றம் இன்று பரஸ்பர விவகாரத்து வழங்கி உத்தரவிட்டது.

2010-ல் தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா. இந்தத் தம்பதியருக்கு வேத் என்கிற மகன் உண்டு.

இந்நிலையில், செளந்தர்யா - அஷ்வின் ஆகிய இருவர் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவியதால் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல முதன்மை நீதிமன்றத்தில் செளந்தர்யா மற்றும் அஷ்வின் ஆகிய இருதரப்பும் மனுத்தாக்கல் செய்தார்கள்.

இவர்கள் மனு மீதான விசாரணை நடைபெற்று, இன்று தீர்ப்பு வழங்கப்படுமென்று சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றம் முன்னரே அறிவித்திருந்தது.

அதன்படி இருவருக்கும் இன்று பரஸ்பர விவகாரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024