Wednesday, September 27, 2017

'ரயில் டிக்கெட்டை பரிசோதிக்க போலீசுக்கு அனுமதி இல்லை'

பதிவு செய்த நாள்26செப்
2017
21:23


புதுடில்லி: ''ரயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, பயணியரின் டிக்கெட்டை பரிசோதிக்கும் அதிகாரம் இல்லை,'' என, ரயில்வே போலீஸ் படைஇயக்குனர், தர்மேந்திர குமார் தெளிவுபடுத்தியுள்ளர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஜான்சியில், ரயிலில், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணி ஒருவரை, ரயில்வே போலீசார் விரட்டி பிடிக்க முற்பட்டதால், அவர், ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரயில்வே மண்டல பொறுப்பாளர்களுக்கு, ரயில்வேபோலீஸ் படை இயக்குனர், தர்மேந்திர குமார் கடிதம்எழுதியுள்ளார்.

அதில், அவர் கூறியுள்ளதாவது: ரயில் பயணியரின் டிக்கெட்டை பரிசோதனை செய்வது, போலீசாரின் பணி அல்ல. ரயில்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே அவர்களது பணி.

இதுதொடர்பாக, ரயில்வே போலீஸ் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதை, மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment

NEWS TODAY 15.01.2025