Wednesday, September 27, 2017

98 வயதில் எம்.ஏ., பட்டம் சாதனை படைத்த தாத்தா

பதிவு செய்த நாள்
செப் 26,2017 21:22



பாட்னா: பீஹாரைச் சேர்ந்த, 98 வயதாகும் ராஜ்குமார் வைஷ்யா, அதிக வயதில் முதுகலை பட்டம் பெற்றவர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார்.

பீஹார் தலைநகர் பாட்னாவைச் சேர்ந்தவர், ராஜ்குமார் வைஷ்யா. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர், உத்தர பிரதேசத்தின் பரேலியில் பணியாற்றினார். கடந்த, 1938ல், பி.ஏ., பட்டம் பெற்ற இவர், 1940ல், சட்டமும் முடித்தார்.முதுகலை பட்டம் பெற வேண்டும் என, நீண்டகாலமாக ஆசைப்பட்டு வந்த அவர், 2015ல் பாட்னாவில் உள்ள, நாளந்தா திறந்த வெளி பல்கலையில், எம்.ஏ., பொருளாதாரம் படிக்க பதிவு செய்தார். கடந்த ஆண்டு, முதலாம் ஆண்டு தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றார்.

தற்போது, இரண்டாம் ஆண்டு தேர்விலும் தேர்ச்சி பெற்று, எம்.ஏ., பட்டம் பெற உள்ளார்.

மிக அதிக வயதில், முதுகலை பட்டப் படிப்பை படிப்பவர் என, 'லிம்கா' இந்திய சாதனை புத்தகத்தில் இவருடைய பெயர் இடம்பெற்றது.

“இந்த வயதில் படிப்பது என்பது சற்று கடினமாகவே இருந்தது. இருப்பினும், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும்,” என்கிறார், வைஷ்யா.

No comments:

Post a Comment

news today 15.01.2025