சென்னையில் அரசு அலுவலகங்கள் களை கட்டுது! ஆயுத பூஜைக்கு தடபுடல் ஏற்பாடுகள்
பதிவு செய்த நாள்
செப் 26,2017 23:32
சென்ற ஆண்டு, இதே நேரத்தில், முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால், ஆயுத பூஜை கொண்டாட்டம் நின்றுபோன அரசு அலுவலகங்களில், இந்த ஆண்டுக்கான ஆயுத பூஜை ஏற்பாடுகள், தடபுடலாக நடந்து வருகின்றன. இதனால், சென்னையில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும், சுத்தம் செய்யப்பட்டு, பளிச்சென்று தோற்றம் அளிக்கின்றன.சென்னையில், தலைமை செயலகம், எழிலகம், மின் வாரிய தலைமை அலுவலகம் உள்ளிட்ட, ஏராளமான அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
அன்பளிப்பு
ஆயுத பூஜையை முன்னிட்டு, சில நாட்களுக்கு முன்பே, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலை உள்ளிட்டவற்றில், தினசரி பயன்படுத்தும் பொருட்களை, ஊழியர்கள் சுத்தம் செய்வது வழக்கம். அதே போல், இம்முறையும் அரசு அலுவலகங்கள் சுத்தம் செய்யப்பட்டு, வண்ண வண்ன ஜிகினா தாள் ஒட்டப்பட்டு, அரசு அலுவலகங்கள் களைகட்டியுள்ளன.ஆயுத பூஜை தினத்தன்று, பொரி, கடலை, பழங்கள் போன்றவற்றை, கடவுள் படங்கள் முன்னால் வைத்து, பூஜை செய்வர். அதோடு, அரசு அலுவலர்கள், ஊழியர்கள் அன்றாடம் பயன்படுத்தும் அலுவலக பொருட்களையும், பூஜைக்கு வைத்து வணங்குவர்.
பூஜைகள் முடிந்த பிறகு, ஊழியர்களுக்கு பொரி, சர்க்கரை பொங்கல், சுண்டல் ஆகியவற்றுடன் பரிசு பொருட்களும் வழங்கப்படும். இதற்காக முன்கூட்டியே சீட்டு நடத்தி அல்லது அன்பளிப்பு வசூல் செய்து பணம் திரட்டி இருப்பார்கள்.
விடுமுறைஆயுத பூஜை மற்றும் விஜய தசமிக்கு அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால், இந்த கொண்டாட்டங்கள், அரசு அலுவலகங்களில், ஆயுத பூஜைக்கு முந்தைய நாளே கோலாகலமாக நடக்கும்.சென்ற ஆண்டு ஆயுத பூஜையின்போது, முதல்வர் ஜெயலலிதா, உடல்நல குறைவு காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவரது உடல்நிலை குறித்து, எந்த தகவலும் சரியாக தெரியாத சூழ்நிலையில், அரசு அலுவலகங்களில், அப்போது ஆயுத பூஜை நடக்கவில்லை.
இதுகுறித்து, அரசு ஊழியர்கள் கூறியதாவது:ஆயுத பூஜை, இந்து பண்டிகையாக இருந்தாலும், அரசு அலுவலகங்களில், மத உணர்வுகளை முன்னிறுத்தி கொண்டாடுவதில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு, மரியாதை அளித்து, பூஜையில் வைத்து கும்பிடுகிறோம்.
தங்க நாணயம்இதை காரணமாக்கி, அலுவலகங்களை சுத்தம் செய்வதுடன், வண்ண காகிதங்களால் அலங்கரிக்கிறோம். தங்க நாணயம் முதல், பாத்திரம் வரை, பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படும். அலுவலகம் சுத்தம் செய்வது, அலங்காரம், பூஜை மற்றும் பரிசு பொருட்களுக்கான செலவை, அதிகாரிகள், ஊழியர்கள் பகிர்ந்து கொள்கிறோம். அதிகாரிகள் பயன்படுத்தும், அரசு கார்களுக்கு, பூஜை போட, அந்தந்த டிரைவர்களிடம், தலா, 500 ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வசூல் தீவிரம்
மின் வாரியம், பொதுப்பணி துறை, சென்னை மாநகராட்சி போன்றவற்றில், கட்டுமானம், உபகரணம் கொள்முதல் உள்ளிட்ட பணிகள், தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட அலுவலகங்களில் பணிபுரியும் சிலர், ஆயுத பூஜையை காரணம் காட்டி, ஒப்பந்த நிறுவனங்களிடமும், பணம் வசூல் செய்வதாக கூறப்படுகிறது.
- நமது நிருபர் -

பல அலுவலகங்களில், ஆயுத பூஜை மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டது.தலைமை செயலகம் போன்ற முக்கிய அலுவலகங்களில், ஆயுதபூஜை கொண்டாட்டம் அடியோடு தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை, ஆயுத பூஜை வருகிறது. இதற்காக, தலைமை செயலகம், எழிலகம், மின் வாரிய தலைமை அலுவலகம், குறளகம், பனகல் மாளிகை உள்ளிட்ட அலுவலகங்களில், தற்போது, சுத்தம் செய்யும் பணி முழு வீச்சில் நடக்கிறது. சென்னை, மாநகராட்சிக்கு சொந்தமான ரிப்பன் கட்டடம், மண்டல அலுவலகங்களிலும், ஆயுத பூஜை ஏற்பாடுகள், களைகட்டி வருகிறது.
இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை, ஆயுத பூஜை வருகிறது. இதற்காக, தலைமை செயலகம், எழிலகம், மின் வாரிய தலைமை அலுவலகம், குறளகம், பனகல் மாளிகை உள்ளிட்ட அலுவலகங்களில், தற்போது, சுத்தம் செய்யும் பணி முழு வீச்சில் நடக்கிறது. சென்னை, மாநகராட்சிக்கு சொந்தமான ரிப்பன் கட்டடம், மண்டல அலுவலகங்களிலும், ஆயுத பூஜை ஏற்பாடுகள், களைகட்டி வருகிறது.
இதுகுறித்து, அரசு ஊழியர்கள் கூறியதாவது:ஆயுத பூஜை, இந்து பண்டிகையாக இருந்தாலும், அரசு அலுவலகங்களில், மத உணர்வுகளை முன்னிறுத்தி கொண்டாடுவதில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு, மரியாதை அளித்து, பூஜையில் வைத்து கும்பிடுகிறோம்.
தங்க நாணயம்இதை காரணமாக்கி, அலுவலகங்களை சுத்தம் செய்வதுடன், வண்ண காகிதங்களால் அலங்கரிக்கிறோம். தங்க நாணயம் முதல், பாத்திரம் வரை, பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படும். அலுவலகம் சுத்தம் செய்வது, அலங்காரம், பூஜை மற்றும் பரிசு பொருட்களுக்கான செலவை, அதிகாரிகள், ஊழியர்கள் பகிர்ந்து கொள்கிறோம். அதிகாரிகள் பயன்படுத்தும், அரசு கார்களுக்கு, பூஜை போட, அந்தந்த டிரைவர்களிடம், தலா, 500 ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வசூல் தீவிரம்
மின் வாரியம், பொதுப்பணி துறை, சென்னை மாநகராட்சி போன்றவற்றில், கட்டுமானம், உபகரணம் கொள்முதல் உள்ளிட்ட பணிகள், தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட அலுவலகங்களில் பணிபுரியும் சிலர், ஆயுத பூஜையை காரணம் காட்டி, ஒப்பந்த நிறுவனங்களிடமும், பணம் வசூல் செய்வதாக கூறப்படுகிறது.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment