அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: தலைமைச் செயலர் வேண்டுகோள்
By DIN | Published on : 08th September 2017 04:52 AM |
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவையேற்று, அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தி வரும் வேலைநிறுத்தம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தி வரும் வேலைநிறுத்தம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வேலைநிறுத்தத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவையேற்று, அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை (செப்.8) முதல் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment