Friday, September 8, 2017

'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு: அரசு பள்ளி ஆசிரியை ராஜினாமா
பதிவு செய்த நாள்08செப்
2017
00:43




விழுப்புரம்: 'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியை, தன் வேலையை ராஜினாமா செய்தார். இது, வெறும் வாய் சவுடால் விடும் ஆளுங்கட்சியினர், அரசியல்வாதிகளுக்கு சவால்விடுவதாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

போலீசார் கெஞ்சல் : விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் அருகே வைரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின், இடைநிலை ஆசிரியை, சபரிமாலா, 34. இவர், நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு, தான் பணியாற்றும் பள்ளி எதிரில், அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும், தன் மகனோடு, தர்ணா போராட்டம் நடத்தினார். 'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அமல்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி தர்ணா செய்தார். தகவலறிந்து வந்த போலீசார் கெஞ்சியதால், சபரிமாலா தன் போராட்டத்தை கைவிட்டார். இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, விழுப்புரத்தில் உள்ள, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், தொடக்கக் கல்வி அலுவலர் மதிவாணனைசந்தித்து, தன் வேலையை ராஜினாமா செய்வதாக, ஆசிரியை சபரி மாலா கடிதம் கொடுத்தார்.

கடிதத்தில், 'நான், 2002 முதல் ஆசிரியையாக, தமிழக கல்வித் துறையில் பணிபுரிந்து வருகிறேன். ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைய வேண்டும் என்பதற்காக, என் மகனை அரசு பள்ளியில் பயில வைக்கிறேன். 'நாடு முழுவதும் ஒரே கல்வித் திட்டம் இல்லாமல், ஒரே தேர்வு முறை என்பது எப்படி நியாயமாகும் என்ற நோக்கத்தில், போராட்டத்தை துவங்கினேன்.
'கல்வி பிரச்னைக்காக ஆசிரியர் குரல் எழுப்பி போராடக் கூடாது என கூறியதால், மன வேதனையில், என் பணியை ராஜினாமா செய்கிறேன்' என, தெரிவித்துள்ளார்.

ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்ட தொடக்க கல்வி அலுவலர், பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனருக்கு கடிதத்தை அனுப்பி வைப்பதாகவும், அவர் உத்தரவையடுத்து, ராஜினாமா கடிதம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மன வேதனை : ராஜினாமா குறித்து ஆசிரியை சபரிமாலா நிருபர்களிடம் கூறியதாவது:

சிறந்த மாணவர்களை உருவாக்கும் நோக்கில்தான், ஆசிரியை பணியில் சேர்ந்தேன். என் பெற்றோரும் என்னை கஷ்டப்பட்டுதான் படிக்க வைத்தனர். அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவி, மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காமல் இறந்துள்ளார். இதற்கு காரணமான, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, நான் துவக்கிய போராட்டத்திற்கு, அரசு பணி தடையாக இருப்பதால் மன வேதனையோடு ராஜினாமா செய்துள்ளேன்.இதற்கடுத்து, மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று, 'கலாம் போல் ஆகலாம்' மாணவர்கள் இயக்கம் அமைத்து, சமூகப் பணி செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். 'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, அரசு பள்ளி ஆசிரியை ராஜினாமா செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாடம் : மக்கள் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் தங்கள் பதவியை தக்க வைப்பதற்காக, பல ஆண்டுகளாக, 'நீட்' விஷயத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வந்தனர். தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதற்காக தங்கள் பதவியை இழக்க முன்வரவில்லை. இந்நிலையில், ஆசிரியைஒருவர், ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதி களுக்கும் பாடம் கபித்துள்ளதாக, சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்துள்ளனர்.



No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...