இமெயில் பழங்காலத்து சங்கதி எனும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? எனில் ‘மேக் யூஸ் ஆஃப்' தொழில்நுட்ப செய்தித்தளம் பட்டியலிட்டிருக்கும் இமெயில் தொடர்பான புள்ளி விவரங்கள் உங்களுக்கு இரட்டிப்பு ஆச்சர்யத்தை அளிக்கக் கூடும். (http://www.makeuseof.com/tag/5-staggering-email-stats-that-are-hard-to-believe/)
முதல் புள்ளிவிவரத்தைப் பார்ப்போமா? தினந்தோறும் பரிமாறிக்கொள்ளப்படும் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 20,500 கோடி மெயில்கள் ஆகும். அதாவது விநாடிக்கு 24 லட்சம் இமெயில்கள் பறந்துகொண்டிருக்கின்றன. நம்ப முடியாமல் இருக்கிறதா? 2015-ம் ஆண்டு கணக்கு இது. இப்போது இன்னும் கூட அதிகமாகி இருக்கலாம். ஆனால் இன்று, இந்த மெயில்களில் பெரும்பாலானவை (90சதவீதம்) ‘ஸ்பேம்' என்படும் குப்பை மெயில்கள் மற்றும் வைரஸ் வாகனமாக மாறிவிடும் வில்லங்க மெயில்களாகும்.
ஆனாலும் கூட தினமும் 250 கோடி பயனாளிகள் உண்மையான மெயில்களை அனுப்பிக்கொண்டிருக்கின்றனர்.
இன்னொரு கணக்குப் படி இமெயில் பயனாளிகளில் 91 சதவீதம் பேர் தினம் ஒரு முறையேனும் தங்கள் முகவரிப் பெட்டியைப் பார்க்கும் வழக்கம் கொண்டுள்ளனர்.
இமெயில் சேவைகளில் பிரபலமாக இருக்கும் ஜிமெயில் 100 கோடி தீவிர பயனாளிகளைக் கொண்டிருக்கிறது. ஆக இமெயிலின் பளபளப்பு வேண்டுமானால் குறைந்திருக்கலாம், அதன் பயன்பாடு அல்ல என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் இல்லையா?
No comments:
Post a Comment