Sunday, January 10, 2016

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அடையாள அட்டை: சுஷ்மா

dinamalar

புதுடில்லி : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

டில்லியில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது: தற்போது இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டுமென யோசனை தெறிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு பெண்களை அனுப்ப தனியார் நிறுவனங்களுக்கு இனி அனுமதியில்லை. அரசு ஏஜென்சிகள் மூலம் மட்டுமே இனி அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024