Saturday, January 16, 2016

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது: ஜெயலலிதா ஆட்சியை விமர்சித்த சோ.ராமசாமி சிறப்புச் செய்தியாளர்

Return to frontpage

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியை விமர்சித்துள்ளார்.

துக்ளக் பத்திரிகையின் 46-வது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் பேசிய அவர், "தமிழக வாக்காளர்கள், தேர்தலின்போது ஓட்டுக்குப் பணம் பெறுவதை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும், ஊழல் பெருகிவிட்டதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. அதிமுக ஆட்சியின்போது ரவுடிகள் கட்டுக்குள் கொண்டு வரப்படுவர் என்ற மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கை சற்றே குறைந்துள்ளது. இருப்பினும், ஜெயலலிதா அரசு முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை போன்ற விவகாரங்களுக்கு தீர்வு கண்டுள்ளது. தமிழகத்தில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது" எனக் கூறினார்.

தேமுதிக சாதனை பாராட்டத்தக்கது:

"வரும் தேர்தலில் தேமுதிகவால் வாக்குகள் சிதற வாய்ப்பிருக்கிறது. தேமுதிக, தொடர்ந்து தனது கட்சிக்கு 8 முதல் 9 சதவீத வாக்குவங்கியை தக்கவைத்துக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது. இது குறிப்பிடத்தக்க சாதனை" என்றார்.

அவரை தொடர்ந்து பேசிய பாமக எம்.பி. அன்புமணி, "பாமக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு சிறப்பு பட்ஜெட் தாக்கல் செய்யும். மதுவிலக்கை அமல் படுத்துவேன்" என்றார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, "குஜராத்தில் அமைந்ததுபோல் தமிழகத்திலும் ஓர் ஆட்சி அமைய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...