மாட்டுப் பொங்கலின்போது கால் நடைகளை அலங்கரிக்க தற் போது பாலித்தீன் பூக்கள், காகிதப் பூக்களை அதிக அளவு பயன்படுத்தத் தொடங்கியதால் பாரம்பரிய நெட்டி மாலைகளுக்கு மவுசு குறைந்து வருகிறது.
மாட்டுப் பொங்கலன்று மாடு களைக் குளிப்பாட்டி, பொட்டு வைத்து, மாலை அணிவித்து விவசாயிகள் அழகு பார்ப்பார் கள். பொங்கலையொட்டி கால் நடைகளுக்கு அணிவிப்பதற் காகவே பிரத்யேகமாக தயாரிக் கப்படும் நெட்டி மாலைகளைப் பயன்படுத்துவது வழக்கம்.
இந்த நெட்டி மாலை தயாரிப்புத் தொழிலில் திருவாரூர் மாவட்டம் நாரணமங்கலத்தில் உள்ள சுமார் 120 குடும்பங்கள் கடந்த நான் கைந்து தலைமுறைகளாக ஈடு பட்டுள்ளன.
பெரும்பாலும் விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்கள் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மட்டுமே இந்த நெட்டி மாலைத் தயாரிப்பில் ஈடுபடுகின்றனர்.
இதற்காக குளங்கள், ஏரிகள், வாய்க்கால் பகுதிகளுக்குச் சென்று அங்கு வளர்ந்திருக்கும் நெட்டியை (ஒரு வகையான தாவரம்) அறுத்துக் கொண்டு வந்து அதனை பக்குவமாக காய வைத்து பின்னர், துண்டு துண்டு களாக நறுக்கி, சாயமேற்றி, அதனை மாலையாக்கி விற்பனை செய்கின்றனர்.
ஆனால், கடந்த சில ஆண்டு களாக பாலித்தீன் மாலைகளும், காகித மாலைகளும் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டு வருவதால், பாரம்பரியமாக மாடு களுக்கு அணிவிக்கப்படும் நெட்டி மாலைகளுக்கு பொது மக்களிடம் வரவேற்பு குறைந்து விற்பனை மந்தமாக உள்ளது.
இதுகுறித்து நெட்டி மாலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கோவிந்த சாமி கூறியபோது, “எனக்கு விவரம் தெரிந்த நாள்முதல் இந்த நெட்டி மாலை தயாரித்து, விற் பனை செய்து வருகிறேன். முன் பெல்லாம், ஏரி, குளங்களில் அதிக அளவில் நெட்டிகள் கிடைக்கும்.
தற்போது மீன் வளர்ப்பதற்காக நீர் நிலைகள் குத்தகைக்கு விடப் படுவதால் நெட்டிகள் அழிக்கப் படுகின்றன. இதனால் முன்பு போல அதிக அளவு நெட்டிகள் கிடைப்பதில்லை. ஒருசில இடங்களில் கிடைக்கும் நெட்டி களைச் சேகரித்து மாலையாக தயாரித்து வியாபாரிகளிடம் மொத்தமாக விற்பனை செய் கிறோம். இங்கிருந்து தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களுக்கு நெட்டி மாலைகள் அனுப்பப்படு கிறது.
இதில் காசு மாலை, ரெட்டை மாலை, தாண்ட மாலை என 3 வகைகள் உண்டு. இந்த மாலைகளை ரூ.5 முதல் ரூ.15 வரை நாங்கள் விற்பனை செய்கிறோம். இதை குடிசைத் தொழிலாக 2 மாதத்துக்கு மட்டுமே செய்கிறோம்.
வியாபாரிகளிடம் முன்பணம் வாங்கிக்கொண்டு தொழிலை செய்வதால், போதிய கூலி கிடைப் பதில்லை. இந்த தொழிலைப் பாதுகாக்கும் விதமாக எங்களைப் போன்ற தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்க அரசு நடவடிக்கை எடுத்தால் இத்தொழில் நலிவடையாமல் இருக்கும்” என்றார்.
No comments:
Post a Comment