Saturday, January 9, 2016

80 கோடி பேரை ஈர்த்த பேஸ்புக் மெஸஞ்சர்

ஐஏஎன்எஸ்

அதிவேகமாக வளர்ந்து வரும் மொபைல் செயலிகளில், பேஸ்புக் குக்கு அடுத்தபடியாக பேஸ்புக் மெஸஞ்சர் இடம்பிடித்துள்ளது. தற்போது மாதம்தோறும் இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 80 கோடியை கடந் திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சமூக வலைதளத்தில் ‘பேஸ்புக்’ முதலிடத்தை பிடித்துள்ளது. மொபைல், இணையதள பயன்பாட்டாளர்களிடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக ‘பேஸ் புக்’ வளர்ந்து வருகிறது. அதன் மற்றொரு செயலியான (ஆப்) பேஸ்புக் மெஸஞ்சரும் தற் போது முக்கிய இடத்தை பிடித்துள் ளது. கடந்த நவம்பர் இறுதி வரை இதனை 50 கோடி பேர் பயன்படுத்தி வந்த நிலையில், இரண்டே மாதங்களில் பயன்பாட் டாளர்களின் எண்ணிக்கை தற் போது 80 கோடியை கடந்திருப்ப தாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலி குறித்து அமெரிக்காவை சேர்ந்த நீல்சன் நிறுவனம் 13 வயதுக்கு அப்பாற்றப்பட்ட மொபைல் பயன்பாட்டாளர்களிடம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஸ்மார்ட்போன் செயலிகளில் ‘பேஸ்புக்’ கடந்த 2015-ம் ஆண்டு மீண்டும் முதலிடத்தை பிடித்தது. மாதம்தோறும் சராசரியாக இந்த செயலியை 12.6 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டை விட, இது 8 சதவீத கூடுதல் வளர்ச்சியாகும். இதே போல், வீடியோ காட்சிகளை பதிவேற்றுவது முதல் இசை, செயலிகள் டிஜிட்டல் சம்பந்தமான அனைத்து பயன்பாடுகளையும் பகிர்ந்து கொள்வதில் அதிக அள விலான நுகர்வோரை இந்த ஆண்டு பேஸ்புக் மெஸஞ்சர் ஈர்த்துள்ளது. 2014-ம் ஆண்டை காட்டிலும், 31 சதவீத வளர்ச்சியை கடந்த ஓராண்டில் பேஸ்புக் மெஸஞ்சர் எட்டி பிடித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் மெஸஞ்சரின் தலைவர் டேவ் மார்க்கஸ் கூறும் போது, ‘‘உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் மெஸஞ்சர் செயலியை, எங்களது குழு உருவாக்கியதால் தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது. 2015-ம் ஆண்டு இறுதியில் மாதம்தோறும் மெஸஞ்சரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 80 கோடியாக அதிகரித்துள்ளது என்ற செய்தி எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது’’ என்றார்.

பேஸ்புக் மெஸஞ்சருக்கு அடுத்தபடியாக 9.7 கோடி பயன்பாட்டாளர்களை கொண்டு, ‘யூ டியூப்’ 2வது இடத்தை பிடித்துள்ளது.

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...