நம்ப வைத்து ஏமாற்றிய அரசு'! ஆவேசத்தில் போக்குவரத்து ஊழியர்கள்
ஜெ.சரவணன்
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகச் சொன்ன அரசு அதற்கு மாறாக அவர்களைப் பழிவாங்கும் விதத்தில் நடந்துகொண்டிருப்பதாக ஊழியர்கள் கொதித்துள்ளனர்.
ஊதியம், அகவிலைப்படி உயர்வு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையைக் கொடுத்தல் உட்பட மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மே மாதம் 14, 15, 16 தேதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அந்த மூன்று நாட்களும் தமிழகம் முழுவதும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பின்னர் அமைச்சர்கள் போக்குவரத்து துறை சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும், ஊழியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும் உறுதியளித்தனர். அதன் பிறகே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் செய்தனர்.
இந்நிலையில் அமைச்சர்கள் சொன்ன எதையும் நிறைவேற்றாமல் வேலைநிறுத்தம் செய்ததற்காகப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சேலம், கோவை மற்றும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம், எஸ்இடிசியில் பணியாற்றும் 500க்கும் மேலான ஊழியர்கள் மீது ஆப்சென்ட், விடுப்பு மறுப்பது மற்றும் பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதனால் போக்குவரத்து ஊழியர்கள் கடும் ஆவேசத்தில் உள்ளனர். இந்த நடவடிக்கையை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.

No comments:
Post a Comment