Sunday, November 15, 2015

ரூ.10 லட்சம் வருமானமா? 'காஸ்' மானியம் 'கட்'டாகும்


ஐதராபாத்:''ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 'காஸ்' மானியத்தை ரத்து செய்வது பற்றி, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது,'' என, பார்லி மென்ட் விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.


மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில், பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தும் திட்டத்தால், 3 கோடி போலி இணைப்பு கள் கண்டுபிடிக்கப்பட்டன; இதன் மூலம், 15 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, காஸ் மானியத்தை, நாடு முழுவதும், 46 லட்சம் பேர் விட்டுக் கொடுத்துள்ளனர். வசதி படைத்தவர்கள், காஸ் மானியத்தை, தாங்களாக விட்டுக் கொடுக்க வேண்டும். 'காஸ் மானியம் பெற, வருமான வரம்பு நிர்ணயிக்கலாமா' என, நிதியமைச்சகம் கேட்டுள்ளது; இது பற்றி பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.வங்கிக் கணக்கில், மானியத்தை நேரடியாகச் செலுத்தும் திட்டத்தில், மண்ணெண்ணெயையும் சேர்க்க, அரசு ஆலோசித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். 
இதற்கிடையில், ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான வெங்கையா நாயுடு கூறியதாவது:ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, காஸ் மானியத்தை ரத்து செய்ய அரசு ஆலோசித்து வருகிறது. இவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் எதற்கு மானியம்; இந்த மானியத்தை, ஏழைகளுக்கு கொடுக்கலாமே.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024