Sunday, November 15, 2015

ரெயில்களில் இன்று முதல் முதல் வகுப்பு மற்றும் ஏ.சி. வகுப்பு கட்டணம் 4.35...


ரெயில்களில் இன்று முதல் முதல் வகுப்பு மற்றும் ஏ.சி. வகுப்பு கட்டணம் 4.35...


புதுடெல்லி, 
ரெயில்களில் இன்று முதல், முதல் வகுப்பு மற்றும் ஏ.சி. வகுப்பு கட்டணம் 4.35 சதவீதம் உயருகிறது.
சேவைவரி உயர்வு
தொலைபேசி கட்டணம், ஓட்டல்களில் சாப்பிடுவது மற்றும் தங்குவது போன்றவற்றுக்கு இதுவரை 14 சதவீதம் சேவை வரி விதிக்கப்பட்டது. இந்த சேவை வரி ½ சதவீதம் உயர்த்தப்படுவதாகவும், நவம்பர் 15–ந் தேதி முதல் இந்த வரி உயர்வு அமலுக்கு வரும் என்றும் கடந்த 6–ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. தூய்மை இந்தியா திட்டத்துக்காக ½ சதவீதம் சேவை வரி உயர்த்தப்படுவதாக அறிவித்தது.
சேவை வரியின் மூலம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வருமானம் கிடைக்கும் என்று மத்திய அரசு மதிப்பிட்டு உள்ளது.
ரெயில் கட்டணம் உயருகிறது
சேவை வரி உயர்வின் காரணமாக ரெயிலில் முதல் வகுப்பு மற்றும் ஏ.சி. வகுப்புகளில் பயணம் செய்வதற்கான கட்டணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4.35 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது.
அதாவது முதல் வகுப்பு மற்றும் ஏ.சி. வகுப்பில் பயணம் செய்வதற்கான மொத்த கட்டணத்தில் 30 சதவீத தொகையின் மீது 14½ சதவீதம் சேவை விதிக்கப்படும். இது மொத்த கட்டண தொகையில் 4.35 சதவீதமாக இருக்கும் என்று ரெயில்வே அமைச்சகம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்து உள்ளது.
கூடுதல் தொகை
சேவை வரி உயர்வின் காரணமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு இரண்டு அடுக்கு ஏ.சி. வகுப்பில் பயணம் செய்வதற்கான கட்டணம் ரூ.140 அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024