Sunday, November 15, 2015

பழம்பெரும் இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மறைவு

பழம்பெரும் இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மறைவு


சென்னை,
பழம்பெரும் சினிமா டைரக்டர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் சென்னையில் நேற்று மரணமடைந்தார். அவருடைய இறுதி சடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
கே.எஸ்.கோபால கிருஷ்ணன்
கற்பகம், குலமா குணமா, பணமா பாசமா, செல்வம், ஆயிரம் ரூபாய், ஆதி பராசக்தி, தேவியின் திருவிளையாடல், கை கொடுத்த தெய்வம், சித்தி உள்பட 45–க்கும் மேற்பட்ட படங்களை டைரக்டு செய்தவர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
பிரபல நடிகை கே.ஆர்.விஜயாவை ‘கற்பகம்’ படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்தவர் இவர் தான். இவரது முதல் படம் சாரதா. கடைசியாக டைரக்டு செய்த படம் காவிய தலைவன்.
இவர் சென்னையை அடுத்த படப்பையில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே இவர் உடல்நலக்குறைவாக இருந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு அவருடைய நுரையீரலில் நீர்க்கோர்ப்பு உருவானது. அதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
மரணம்
சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை 6.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். அவருடைய உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள மகன் கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான திரை உலக பிரமுகர்களும், பொதுமக்களும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் இறுதிச்சடங்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்கிறது.
குடும்பம்
மரணமடைந்த டைரக்டர் கோபால கிருஷ்ணனுக்கு வயது 86. இவருடைய சொந்த ஊர் கும்பகோணம். மனைவி சுலோச்சனா ஏற்கனவே மரணமடைந்துவிட்டார். இவர்களுக்கு கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், அசோக், குமார், ரவி, ராஜ்குமார், துரை என்ற 6 மகன்கள் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...