சென்னை: சுவிதா, பிரீமியம் உள்ளிட்ட அதிக கட்டண ரயில்களுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக இனி எல்லா ரயில்களிலும்் வரவேற்புக்கு ஏற்ப கட்டணத்தை அதிகரிக்கவும், குறைக்கவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பானது என்பதால் மட்டுமின்றி, கட்டணத்தையும் கருத்தில் கொண்டுதான் ரயிலில் செல்ல பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். கட்டண உயர்வுக்கு பிறகு சில நேரங்களில் முதல் வகுப்பு ஏசியில் செல்ல ஆகும் கட்டணம் விமானக்கட்டணத்திற்கு சமமாகவும் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக சரிவில் இருக்கும் ரயில்வேயை சீராக்க வருவாய் முக்கிய இலக்காகி போனது. அதன் ஒரு பகுதியாகதான் அதிக கட்டண சிறப்பு ரயில்(பிரீமியம்), பல மடங்கு கட்டண சிறப்பு ரயில்(சுவிதா) ஆகியவை அறிமுகமாகின. ஆரம்பத்தில் இந்த ரயி்ல்கள் அறிவித்த போது வரவேற்பில்லாமல் ரத்து செய்யப்பட்டன. ஆனால் விழாக்காலங்களில் வழக்கமான சிறப்பு ரயில்கள் அறிவிக்காததால் , வேறு வழியில்லாமல் போனதால் அந்த அதிக கட்டண சிறப்பு ரயில்களை பயன்படுத்த வேண்டிய நிலைமை.
வேறு வழியில்லாத சூழ்ந்ிலையில் அதிக கட்டண ரயில்களை மக்கள் பயன்படுத்துவதை பார்்த்த ரயில்வே வழக்கமான ரயில்களிலும் அதே முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி நாட்டில் எல்லா ரயில்களிலும், எல்லா வகுப்புகளுக்கும் ஏற்ற, இறக்கங்களுடன் கூடிய கட்டண முறையே அமல்படுத்தப்படும். ஒவ்வொரு ரயிலிலும் ஒவ்வொரு வகுப்பிற்கும் வரவேற்புக்கு ஏற்ப கட்டணம் உயர்த்தப்படும். வரவேற்பு இல்லாமல் இருந்தால் அதிக கட்டணம் குறைக்கப்படும். எப்படியிருந்தாலும் வழக்கமான கட்டணத்தை விட அதிகமாகதான் இருக்கும். இதனை முதற்கட்டமாக சென்னை - திருவனந்தபுரம், சென்னை - மதுரை போன்ற அதிக தேவை இருக்கும் வழித்தடங்களில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வே வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கட்டணத்தை அதிகரிப்பதின் மூலம் பயணிகளிடம் முதலில் வரவேற்பு இல்லாவிட்டாலும் வேறு வழியில்லாமல் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுவார்கள் என்று ரயில்வே எதிர்பார்க்கிறது.
ரயில் கட்டணம் பலமுறை உயர்த்தப்பட்ட பிறகு பயணிகளின் எண்ணிக்கை 2 ஆண்டுகளாக அகில இந்திய அளவில் சரிந்து வருகிறது. முதல்முறையாக 2013 டிசம்பரில் பயணிகளின் எண்ணிக்கை 2.4 சதவீதம் குறைந்தது. உதாரணமாக 2014-15ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இருந்த பயணிகளின் எண்ணிக்கையைவைிட நடப்பு நிதியாண்டான 2015-2016ல் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சுமார் 8 சதவீதத்திற்கும் மேல் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பயணிகள் போக்குவரத்தின் மூலமான கிடைத்த வருவாய் மட்டும் குறையவில்லை. இது கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் கிடைத்த வருவாயை விட 8.5 சதவீதம் அதிகம்.
பயணிகள் எண்ணிக்கை குறைந்தாலும் கட்டண உயர்வு மூலம் அதிக வருவாய் வருவதை பார்த்த ரயில்வே எல்லா ரயில்களிலும் ஏற்ற இறக்கத்துடன் கூடிய கட்டண முறையை அமல்படுத்துவதில் உறுதியாகவே உள்்ளது. இந்த உறுதி கட்டண உயர்வுக்கு மட்டுமே வழிவகுக்கும்.
No comments:
Post a Comment