Monday, January 2, 2017

முதல்வருக்கு எதிராக தம்பிதுரை காண்டானதற்கு காரணம் இதுவா?

By DIN  |   Published on : 02nd January 2017 01:19 PM  |

சென்னை: அதிமுக பொதுச் செயலர் சசிகலா, தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது ஏறக்குறைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான குரல் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கட்சியின் தலைமையும், ஆட்சியின் தலைமையும் ஒருவராக இருந்தால்தான் ஒருமித்து செயல்பட முடியும் என்றும் அவர் சசிகலாவுக்குக் கூறியுள்ளார்.

இது கட்சி அடிப்படையில் அவர் கூறியுள்ள கருத்தாக எடுத்துக் கொண்டாலும், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் என்னவென்று தகவல் அறிந்த வட்டாரங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுகிறார்கள்.

அதாவது, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அடுத்த முதல்வரைத் தேர்வு செய்யும் போது, ஓ. பன்னீர்செல்வத்துடன் தம்பிதுரையின் பெயரும் அலசப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போதே தம்பிதுரைக்கு பன்னீர்செல்வத்தின் மீது சற்று வருத்தம் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், அந்த வருத்தம் காண்டாக மாறும் வகையில் புது தில்லியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதாவது, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புது தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். அப்போது, பன்னீர்செல்வத்துடன் தம்பிதுரையும் சென்றார். இருவரும் ஒன்றாகத்தான் மோடியை சந்தித்துப் பேசினர்.

ஆனால், இடையே தம்பிதுரையை வெளியே செல்லுமாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தம்பிதுரையை வெளியே அனுப்பிவிட்டு, சுமார் 20 நிமிடங்கள் மோடியுடன் அவர் தனியாக பேசியுள்ளார். அப்போது அவர் என்ன கூறினார்? என்பது இன்னமும் சிதம்பரம் ரகசியமாகவே உள்ளது.

புது தில்லியில் கட்சி அளவில் செல்வாக்கு மிக்க தன்னையே வெளியே அனுப்பிவிட்டாரே பன்னீர்செல்வம் என்று அப்போதுதான் தம்பிதுரைக்கு அதிருப்தி ஏற்பட்டு, அது காண்டாக மாறி, சசிகலாவை முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுக்கும் அளவுக்கு மாறிவிட்டதாக தகவல் அறிந்த பட்சிகள் கதறுகின்றன.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024