Monday, January 2, 2017

ஈரோடு - சென்னை சிறப்பு ரயில் ஜன.29 வரை நீட்டிப்பு

By சேலம்,  |   Published on : 02nd January 2017 09:48 AM |
ஈரோடு - சென்னை பகல் நேர சிறப்பு ரயில் சேவை வரும் ஜனவரி 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலம், விருத்தாசலம் மார்க்கத்தில் சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, வண்டி எண் 06028, 06027 ஆகியவை வாரத்துக்கு 5 நாள்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், போதிய பயணிகள் இல்லாதது போன்ற காரணங்களால் ரயில் சேவை நிறுத்த வேண்டியது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும் என சேலம் ரயில்வே கோட்டம் கேட்டுக் கொண்டது.
அதைத்தொடர்ந்து, இந்த ரயில் டிசம்பர் இறுதி வரை இயக்குவதாக நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில், வரும் ஜனவரி 29 ஆம் தேதி வரை இயக்கப்படும் என நீட்டிப்பு செய்து சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 1, 7, 8, 14, 15, 21, 22, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு மார்க்கத்திலும் ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024