Monday, January 2, 2017

ஒரே நாளில் ரூ.180 கோடி மது விற்பனை – புத்தாண்டில் குடிமகன்கள் கும்மாளம்

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒரே நாளில் ரூ.180 கோடிக்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளது. கடும் பணத்தட்டுப்பாட்டை மீறியும் கடந்த ஆண்டு விற்பனையை மிஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மொத்தம் 6,323 டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் ரூ.65 கோடிவரை வருவாய் கிடைக்கிறது. விடுமுறை நாட்களில், ஒருநாளைக்கு சுமார் ரூ.80 முதல் ரூ.90 கோடி வரை விற்பனையாகிறது. பண்டிகை காலங்களில் ஒரு நாளைக்கு ரூ.150 முதல் ரூ.180 கோடிவரை விற்பனையாகிறது.

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகள் மூலம் நேற்று முன்தினம் மட்டும் சுமார் ரூ.180 கோடிக்கு சரக்குகள் விற்று, சாதனை படைத்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு புத்தாண்டை ஒட்டி ஒரே நாளில் சுமார் ரூ.170 கோடிக்கு மேல் விற்பனையானது. இந்த ஆண்டு கடும் பணத் தட்டுப்பாட்டையும் மீறி ரூ.10 கோடிக்கு மேல் சரக்குகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024