திமுகவின் பாராட்டு மழையில் ஓபிஎஸ்: சட்டசபை ருசிகரம்!
திமுகவின் பாராட்டு மழையில் ஓபிஎஸ்: சட்டசபை ருசிகரம்!
தமிழக அரசியல் கலாச்சாரம் மாறி வருவது. ஆரோக்கியமான அரசியலை தமிழக அரசியல் களம் பார்க்க ஆரம்பித்துள்ளது. வட மாநிலங்களில் அரசியல் கட்சிகள் வெளியில் நட்பு பாராட்டிக்கொள்ளும் ஆனால் தமிழகத்தில் எலியும், பூனையுமாக முறைத்துக்கொண்டு செல்வார்கள்.
இந்நிலையில் தற்போது அந்த சரித்திர நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. தமிழக சட்டசபையில் ஒரு எதிர்கட்சி முதல்வரை பாராட்டுவது அவருக்கு ஆதரவளிப்பது என்பது மிகவும் எதிர்பார்க்ககூடாத ஒன்று. ஆனால் அது நடந்துகொண்டிருக்கிறது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் தொடர்ந்து முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மரியாதையும், ஆதரவும் அளித்து வருகிறது எதிர்க்கட்சியான திமுக. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கூட இந்த அளவுக்கு மரியாதை கொடுத்ததில்லை திமுக.
இந்நிலையில் நேற்று சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் திமுகவின் துரைமுருகன் முதல்வர் பன்னீர்செல்வத்தை வெகுவாக பாராட்டினார்.
"நன்றாக பாராட்டுகிறோம்...
நீங்களே தொடர்ந்து முதலமைச்சராக இருக்க பாராட்டுகிறோம்...
5 ஆண்டுகளும் நீங்களே முதல்வராக இருக்க பாராட்டுகிறோம்...
அதற்கான சக்திகளை நாங்கள் தருகிறோம்...
அதற்கு எதிராக உங்கள் பின்னால் இருப்பவர்கள் போகாமல் பார்த்து கொள்ளுங்கள்..
மனப்பூர்வமாக பாராட்டுகிறோம்..." என துரைமுருகன் பாராட்டியது ஆச்சரியமாக இருந்தது.
No comments:
Post a Comment