Thursday, September 14, 2017

275 கி.மீ., தூரம் லாரியை ஓட்டி வந்த போதை டிரைவர்பெரும் விபத்து தவிர்ப்பு
பதிவு செய்த நாள்14செப்
2017
01:40

திருமங்கலம், நான்கு வழிச்சாலையில் 25 டன் எடையுள்ள 500 சிமென்ட் மூடைகளுடன் 14 சக்கரம் கொண்ட டைலர் லாரியை 275 கி.மீ., துாரம் போதையில் ஓட்டி வந்ததாக டிரைவர் சுவாமிநாதன்,37, கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலியை சேர்ந்த இவர், நேற்று அதிகாலை அரியலுார் அருகே உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் இருந்து 25 டன் எடையுள்ள 500 மூடைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கொல்லம் புறப்பட்டார். இந்த லாரி 14 வீல் கொண்ட டைலர் வகை லாரி.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: லாரி ஓட்டத்தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் சுவாமி
நாதன் போதை ஏறும் வகை குடித்தார். இந்த லாரி பெரும்பாலான பயணத்தை நான்கு வழிச்சாலையிலேயே கடந்துள்ளது. 

கட்டுப்பாடு இழந்த நிலையில் லாரி மதுரை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. இதுகுறித்து போலீசார், திருமங்கலம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு தகவல்
கொடுத்தனர். அவர் சக போலீசாருடன் லாரியை விரட்டி ராஜபாளையம் ரோட்டில் மடக்கினார். அப்போதும் சுவாமிநாதன் போதையில் நிதானமின்றி காணப்பட்டார். அவரை கைது செய்தோம்.

டிரைவர் போதைக்கும், அவர் லாரி ஓட்டிய வேகத்திற்கும், லாரியின் வலுவான கட்டமைப்பிற்கும் எதிரே ஏதாவது வாகனம் சிக்கியிருந்தால் பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கும். அவரது
ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024