தேசிய செய்திகள்
50 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் வழங்க கோரிய தமிழக மாணவியின் மனு தள்ளுபடி
50 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், தனக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வழங்க வேண்டும் என்று கோரி தமிழகத்தைச் சேர்ந்த மாணவி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
செப்டம்பர் 19, 2017, 05:18 AM
புதுடெல்லி,
தமிழக மருத்துவ கல்லூரிகளில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவி திருமா மகள் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘‘தமிழக அரசு கடைப்பிடிக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக செய்து வருவது போல் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றி, அதன் அடிப்படையில் மேலும் சில இடங்களை உருவாக்கி தகுதி அடிப்படையில் உரிய மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவியருக்கு இந்த கல்வி ஆண்டு மருத்துவ கல்லூரியில் இடம் வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.
மேலும், தான் நீட் தேர்வில் 373 மதிப்பெண்கள் பெற்று 1,138–வது இடத்தில் தேர்வு பெற்று இருப்பதாகவும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகுதி பட்டியலில் 50 சதவீதத்துக்குள் வருவதாகவும், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டினால் தன்னுடைய வாய்ப்பு பறிபோனதாகவும் மனுவில் அந்த மாணவி குறிப்பிட்டு இருந்தார்.இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் விஜயன் மற்றும் வக்கீல் சிவபாலமுருகன் ஆகியோர் ஆஜரானார்கள்.
விசாரணை தொடங்கியதும், 69 சதவீத இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக முன்பு வழங்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மூத்த வக்கீல் விஜயன் வாசித்து காட்டினார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி வாதாடுகையில், கடந்த ஆண்டுகளில் வழங்கியது போல இந்த ஆண்டும் அதேபோன்ற உத்தரவை கோர்ட்டு பிறப்பிக்கலாம் என்று கூறினார்.அதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் ஆஜரான வக்கீல் கவுரவ் சர்மா, மனுதாரர் தாமதமாக கோர்ட்டை அணுகி இருப்பதாகவும், கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை போன்றவை முடிவடைந்த இந்த நேரத்தில் இதுபோன்ற உத்தரவுகள் தற்போதைய மாணவர் சேர்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
உடனே மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜயன், தங்கள் தரப்பில் தாமதம் ஏதும் இல்லை என்றும், தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 25–ந்தேதிதான் தொடங்கியது என்றும் கூறினார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முதலாம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்டு 31–ந்தேதி வரை மட்டுமே அனுமதி வழங்க முடியும் என்றும், மனுதாரர் அந்த தேதிக்கு பிறகு வந்ததால் அவருக்கு இடம் வழங்குமாறு உத்தரவிட முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்

No comments:
Post a Comment