Monday, September 18, 2017

சி.பி.ஐ.,க்கு விலக்கு ஆர்.டி.ஐ.,யில் கிடையாது'

பதிவு செய்த நாள்18செப்
2017
00:21


புதுடில்லி: 'ஊழல் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சி.பி.ஐ.,க்கு முழு விலக்கு அளிக்க முடியாது' என, டில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு, ஐ.பி., - 'ரா' - என்.ஐ.ஏ., - சி.பி.ஐ., உள்ளிட்ட புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு, ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விலக்கு அளிக்கும் ஷரத்துக்களை சேர்த்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, தகவல் உரிமை சட்டப் பிரிவில் உள்ள ஷரத்துக்களை மேற்கோள் காட்டி, பதில் அளிக்க, சி.பி.ஐ., மறுத்து வருகிறது.

இந்நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த, தகவல் உரிமை ஆர்வலர், சி.ஜே.கரீரா, அரசு உயரதிகாரிகள் பலரின் ஊழல் தொடர்பான தகவல்களை அளிக்கும்படி, சி.பி.ஐ.,யிடம், தகவல் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார். ஆர்.டி.ஐ.,யில், தங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், மனுதாரரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என, சி.பி.ஐ., தரப்பில் கூறப்பட்டிருந்து.

சி.பி.ஐ.,யின் வாதத்தை, 2012ல், தலைமை தகவல் ஆணையர், சத்யானந்தா மிஸ்ரா நிராகரித்தார். 'ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான தகவல்களை அளிப்பதில், சி.பி.ஐ.,க்கு, தகவல் உரிமை சட்டத்தில் விலக்கு தரப்படவில்லை' என, அவர் கூறியிருந்தார்.

இதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ., மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில், தீர்ப்பளித்த, நீதிபதி, விபு பக்ரு, ''ஊழல் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சி.பி.ஐ.,க்கு முழு விலக்கு அளிக்கப்படவில்லை,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024