Tuesday, September 19, 2017

Posted Date : 00:25 (19/09/2017)

சென்னையில் கனமழை: பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

பிரேம் குமார் எஸ்.கே.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாலை முதல் பரவலாக நல்ல மழை பெய்தது.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த நான்கு நாள்களுக்கு மழை பெய்ய வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதே போன்று தமிழகம் முழுவதும் இன்று பரவலாக மழை பெய்தது.

சென்னையில் பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரம் முதல் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. பலர் அலுவலகம் முடித்து வீடு செல்லும் நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்தது.

கூடவே மாலை முதல் பெய்த்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர். இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டது. எழும்பூர், கிண்டி, கோடம்பாக்கம், கோயம்பேடு, திருவள்ளூர், பொன்னேரி உள்ளிட பல இடங்களில் நல்ல மழை பெய்தது. தமிழகத்தின் பிற மாநிலங்களை பொருத்தவரை தேனி, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இன்னும் மூன்று நாள்கள் மழை தொடரும் என அறிவிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படங்கள்: வி. நாகமணி

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024