Wednesday, January 11, 2017


தனியார் பஸ்சில் வீடியோ போட்டு கவர்ந்தது அந்தக்காலம்... இப்போ இலவச வைபை வந்தாச்சு!


திருநெல்வேலி: பேருந்துகளில் பயணக்களைப்பு தெரியாமல் பயணிகள் பயணம் செய்வதற்கு வீடியோ ஒளிபரப்பிய காலம் போய் இப்போது இலவச வைபை வசதி செய்து கொடுத்து வருகின்றனர் பேருந்து உரிமையாளர்கள்.
மக்களிடையே இணையதள வசதி உள்ள ஆன்ட்ராய்டு செல்போன்கள் புழக்கம் அதிகரித்து உள்ளது. நெல்லையில் சில தனியார் டவுன் பஸ்சில் இலவச வைபை வசதியை ஏற்படுத்தி இருக்கின்றனர். தனியார் பஸ் கம்பெனி நிர்வாகம், பயணிகளை கவருவதற்காக டி.வி., எப்.எம்.ரேடியோ போன்ற வசதிகளை செய்துள்ளன. இதனால் பெரும்பாலான பயணிகள் அரசு பஸ்சில் பயணம் செய்வதை தவிர்த்து, தனியார் பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே நெல்லையில் உள்ள தனியார் பஸ் கம்பெனி நிர்வாகம், பயணிகளை கவருவதற்காக நெல்லையில் இருந்து கருங்குளத்திற்கு இயக்கப்படும் டவுன் பஸ்சில் இலவச வைபை வசதியை அறிமுகப்படுத்தியது.
இதை தொடர்ந்து நெல்லை டவுணில் இருந்து மேலப்பாளையம் செல்லக்கூடிய மற்றொரு பஸ்சிலும் அந்த தனியார் நிறுவனம் இலவச வைபை வசதி செய்திருக்கிறது. இந்த பஸ்சில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் செல்போனில் இணைய தள சேவை பெற விரும்பும் பட்சத்தில், கண்டக்டரிடம் வைபை செயல்படுவதற்கான பாஸ்வேர்டு கேட்டு, பயன்படுத்திக் கொள்ளலாம். பஸ்சில் இருந்து இறங்கிய சற்றுநேரத்தில் வைபை இணைப்பு தானாக செயல் இழந்து விடும். தனியார் பஸ்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த இலவச வைபை வசதி பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024